வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி; பாஜவின் இணைந்தார் திமுக MLA சரவணன்

 தி.மு.க-வில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் சுற்றுக்காக காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

Last Updated : Mar 14, 2021, 02:53 PM IST
  • மக்கள் சேவையில் அதிகம் ஈடுபட்டு வந்த தனக்கு பல வகையில் அழுத்தம் தர பட்டதாகவும் எம் எல் ஏ சரவணன் கூறியிருந்தார்.
  • இன்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் எம் எல் ஏ சரவணன்.
  • கொள்ளை அடிப்பதையே பணியாக செய்து கொண்டிருக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை
வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி; பாஜவின் இணைந்தார் திமுக MLA சரவணன்  title=

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், சீட் கிடைக்காதவர்கள் கட்சி மாறும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன.

திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ திரு.சரவணன் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்!

மார்ச் 12-ம் தேதி  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தி.மு.க வெளியிடப்பட்டது. தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், 173 இடங்களில் தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது. 61 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றனர்.  இதில் சிலர், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானதில் இருந்து, தி.மு.க-வில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. 

அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் சுற்றுக்காக காத்திருக்க வேண்டும்.  ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ள நிலையில், எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோமோ, அத்தனை தொகுதி எண்ணிக்கையின் தான் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதனால், அனைவரும் அதிருப்தி அடையாமல், கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியில், தி.மு.க (DMK) சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன், தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

 மக்கள் சேவையில் அதிகம் ஈடுபட்டு வந்த தனக்கு பல வகையில் அழுத்தம் தர பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் எம் எல் ஏ சரவணன். 

சென்னையில் இந்த நிகழ்வின் போது பேசிய பாஜக தலைவர், திரு. எல்.முருகன், ``தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும் புறட்டும் கொண்டஅறிக்கை. கொள்ளை அடிப்பதையே பணியாக செய்து கொண்டிருக்கும் திமுகவின் இந்த அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை." என்று தெரிவித்தார்.

ALSO READ | வெளியானது திமுகவின் தேர்தல் அறிக்கை; இந்து ஆலயங்கள் புனரமைக்க ₹1000 கோடி
 

Trending News