‘மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது ; பவானிசாகரில் நிரம்பி பாய்ந்தோடும் தண்ணீர் ; காவிரியில் பிரம்மாண்ட வெள்ளம் ; ஒகேனக்கல்லில் கொட்டும் அருவி’ போன்ற சொற்றொடர்கள் எல்லாம் சென்னைவாசிகளுக்கு காதில் தேன்வந்து பாயும் அளவிற்கு இனிமையானது. பருவநிலையைப் பொறுத்தவரை வெயில் சென்னையை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலும் கண்களுக்கு விருந்தாக சென்னைவாசிகளுக்கு இருப்பது கடல்தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கண்மாய்க்கு வழிபாடு - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரம்மாண்ட கிடா விருந்து.!


ஆறு, ஏரி போன்ற நீர்நிலையங்கள் நிரம்பி வழியும் காட்சிகளெல்லாம் சென்னைவாசிகளுக்கு அபூர்வம். பெரும்பாலும் பெருமழை வெள்ளத்தில் வாழ்வாதாரத்தையே இழக்கும் அளவுக்கான மழையை மட்டுமே சென்னைவாசிகள் இதுவை கண்டு வந்துள்ளனர். கனமழைகளுக்கு ரொம்பும் கண்மாய்களையும், மீன்கள் துள்ள பாய்ந்தோடும் ஏரிகளையும், ஆறுகளையும் காண்பது அரிது. இதையெல்லாம் காண சென்னையைவிட்டு வெளியே சுற்றுலா செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 


இந்நிலையில், தற்போது சென்னையில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குளுகுளு சாரலுடன், பலத்தக் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. குறிப்பாக, சென்னை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ள  புழல் ஏரி தற்போது தன் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. 


சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்கான ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதன் உயரம் 21.20 ஆகும். பரந்து விரிந்து காணப்படும் இந்த புழல் ஏரி தற்போது முழுவதுமாக நிரம்பும் நிலையில் உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள்  இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. கிட்டத்தட்ட புழல் ஏரி, கடலைப் போல் காட்சியளிக்கிறது. அணையின் மதகு வரை தண்ணீர் எழும்பும் ஓசையும், சிறுசிறு அலையும் கடலையே நினைவூட்டுகின்றன. பரவசமான இந்தக் காட்சிகளைக் காண பொதுமக்கள் ஆர்வமுடன் புழல் ஏரிக்கு வந்துசெல்கின்றனர். ஏரியின் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தும் வருகின்றனர்.


தற்போது உள்ள நீர்மட்டத்தின் அளவு  3086 மில்லியன் கன அடி உயரம் இருபத்தி 20.35 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும்  மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஏரியின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.  இதனால் ஏரியின் நீர் அளவு முழு கொள்ளளவை எட்டினால், உபரிநீர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘மெயின் ரோட்டில்’ அராஜகத்தில் ஈடுபட்டதால்தான் கைது! - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR