Rajinikanth Explanation For Sanghi: ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் லால் சலாம். இவர் '3', 'வை ராஜா வை' ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு, 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இவர் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லால் சலாம் பட நடிகர்கள்


இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகக் கோப்பையை வென்று கொடுத்தவருமான கபில் தேவ் ஆகியோர் கேமியா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட துணை நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். 


படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதன் விநியோக உரிமையை பெற்றுள்ளது. படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த வகையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த ஜன. 26ஆம் தேதி நடைபெற்றது. 


மேலும் படிக்க | ‘கங்குவா’ பட நடிகருக்கு கிஸ் கொடுத்த ரசிகை..வைரலாகும் வீடியோ..!


ஐஸ்வர்யாவின் பேச்சு


இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில், ரஜினிகாந்த் நடிகர் விஜய் குறித்து பேசியது வைரலானது. அதாவது, தான் கூறிய காக்கா - கழுகு கதை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ரஜினிகாந்த் மேடையிலேயே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், அதை விட அன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பேச்சுதான் மிகவும் பேசப்பட்டது. 


அதில்,"எனது அப்பா ரஜினியை சமூக வலைத்தளங்களில் சங்கி என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ரஜினிகாந்த் ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் போன்ற ஒரு படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த மாதிரியான படங்களில் நடிக்க முடியாது. லால் சலாம் படத்தில் ரஜினியை தவிர அவ்வளவு தைரியமாக யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அதனால் சொல்கிறேன் ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை" என குறிப்பிட்டிருந்தார். 


ரஜினிகாந்த் விளக்கம்


இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்தார். விஜயவாடாவுக்கு சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்கு  படப்பிடிப்பிற்கு செல்ல இருப்பதாக ரஜினிகாந்த் கூறினார். 


லால் சலாம் படம் குறித்து கேட்டதற்கு,"லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்" என தெரிவித்தார். அவரது மகள் ஐஸ்வர்யா 'எனது அப்பா சங்கி அல்ல' எனக் கூறியது குறித்து கேட்டபோது, "சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள். அப்பா சங்கி அல்ல என்பது அவருடைய கருத்து" என தெரிவித்தார்.


வேட்டையன் - தலைவர் 171


லால் சலாம் திரைப்படம் வரும் பிப். 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜெ.ஞானவேல் இயக்குகிறார். ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 


மேலும் படிக்க | அஜீத்தின் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ