DMDK தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்!
விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவும் அரசியல் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவும் அரசியல் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரத்தில் சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் தங்கி 2 மாதங்கள் விஜயகாந்த் சிகிச்சைப் பெற்றுவிட்டு அண்மையில் சென்னை வந்தார்.
இதையடுத்து, சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்திடம் நேரில் உடல்நலம் விசாரித்தார். சந்திப்பின் போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த கூறுகையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அமெரிக்காவில் இருக்கும் போதே சந்திக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. நான் உடல்நலம் இன்றி மருத்துவமனையில் இருக்கும் போது முதன் முதலில் வந்து பார்க்க வந்தவர் கேப்டன். சிங்கப்பூரில் இருந்து நான் வந்ததும் முதலில் விசாரித்தவர் அவர்தான். அவர் எனது நல்ல நண்பர். அவர் நன்றாக இருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.
இந்த சந்திப்பில் துளி கூட அரசியல் கிடையாது. நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே சொல்லி விட்டேன் இப்போது ஒன்றும் இல்லை என கூறினார்.