தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும்  அனல பறக்கும் பிரச்சாரத்தில் தலைவர்கல் ஈடுபட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அங்கு  திமுக வேட்பாளரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அங்கு தங்கி இருக்கும் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் போதே சோதனை நடத்தியது திமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் பின்னணியில் ஒரு முக்கிய ஆடியோ ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது.


சமீபத்தில், திருவண்ணாமலையில் உள்ள திமுகவின் நிர்வாகி ஒருவர், கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகருடன் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. 


அந்த ஆடியோவில்,  திமுக வேலுவுக்கு இருக்கும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும், பேசியுள்ளதோடு, அவருக்கு அடிமையாக எவ்வளவு நாள் இருப்பது என ஆதங்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 8 கல்வி நிறுவனங்கள், 6 ஆயிரம் ஏக்கர் நிலம், கிரானைட் கம்பெனி ஸ்பின்னிங் மில்,  என ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளதோடு மெடிக்கல் காலேஜ் கட்டி வருகிறார். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பே கிடைப்பதில்லை என்ற வகையில் அவர் பேசியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. 


ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி


வேலுவின் கல்லூரி வளாகத்திலும், திருவண்ணாமலை மற்றும் சென்னையில் உள்ள அவரது குடியிருப்புகளிலும் நடந்த சோதனைகளின் போது ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்து வருமான வரித் துறை பதில் ஏதும் கூறவில்லை.


வருமான வரிச் சோதனை குறித்து கருத்து தெரிவித்த  திமுக பொருளாளர் துரைமுருகன், அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "தேர்தலில் திமுகவை தோற்கடிக்க முடியாது என்பதால் வருமான வரி சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்று அவர் கூறினார்.


முன்னதாக மார்ச் 15 ம் தேதி தாரபுரத்தில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த தலைவரும் கட்சி மாநில பொருளாளருமான சந்திரசேகரின் அலுவலக வளாகத்தில்  வருமான வரி துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத  ரூ .11.5 கோடி பணம் கண்டிபிடிக்கப்பட்டது.  ரூ .80 கோடி அளவில் முறைகேடு நடந்ததும் கண்டறியப்பட்டது. 


ALSO READ | வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா; எதிர்கட்சிகளின் வாதம் சரியானதா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR