இந்தியாவில் உள்ள பல கட்சிகள் ஜெயித்தால், ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் (India) சுமார் 80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் உள்ளன.
வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில் தேர்தல் நிலவரத்தை அறிய 4-5 நாட்கள் காத்திருக்க வேண்டும். அராஜக போக்கு கொண்ட கட்சிகள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி, மொத்தமாக தாங்களே வாக்குகளை செலுத்திக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) மாறிய பின், காட்சிகள் மாறியது. இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2-3 மணி நேரங்களிலேயே நிலவரம் தெரிந்து விடுகிறது. மாலைக்குள் முடிவுகளே வந்து விடுகின்றன.
தேர்தல் ஆணையம் (Election commission of India) வாக்குபதிவு இயந்திரங்களை வாக்குசாவடிக்கு எடுத்து செல்வது முதல், பதிவான வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களுக்கு எடுத்து செல்லும் வரை, முறைகேடுகளை தடுக்கும் நோக்குடன சிறந்த வகையில், பல கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கிறது.
தேர்தல் நடக்கும் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மாவட்ட கருவூலங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேரும்.
ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் (Candidates), அவர்களை சார்ந்த நான்கு நபர்கள், அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட கருவூலத்திற்கு ஒரு மாதம் காலம் முன்னதாக கொண்டு வரப்படு அந்த வாக்கு இயந்திரங்கள் முழுமையாக பரிசோதிக்கப்படும்.
அதன் பின்னர், வாக்கு இயந்திரங்களின் வரிசை எண் மற்றும் அந்த இயந்திரம் கொண்டு செல்லப்பட உள்ள தொகுதியின் பூத் எண் ஆகிய விபரங்கள் அதில் குறிக்கப்படும். இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், வாக்கு பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட உள்ள வாக்குச்சாவடி குலுக்கல் முறையில் தேர்ந்தேடுக்கப்படும்.
ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி
அப்படி தேர்தெடுக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்களில் (EVM), அது கொண்டு செல்லப்படும் தொகுதி மற்றும் தேர்தல் நாளன்று குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் அவர்கள் இருக்கும் பூத் எண் மற்றும் வாக்கு இயந்திர வரிசை எண் ஆகியவை குறிக்கப்படும்.
பூத் ஏஜென்டுகளுக்கு, வாக்கு பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டால். அந்த வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பதில் வேறொரு வாக்கு பதிவு இயந்திரத்தை பயன் படுத்த சொல்ல முழு உரிமையும் பூத் ஏஜென்டுகளுக்கு முழு உண்டு.
வாக்கு பதிவு முடிந்த பின், பூத் ஏஜென்டுகள் முன்னில்லையில் மொத்த வாக்கு எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு அவை பாதுகாப்பாக மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன
தேர்தலில் (Election) போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக, 24 மணி நேரமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, எந்த தவறும் நடைபெறவில்லை என உறுதிபடுத்தப்படும்.
பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று காலை அந்த சீல் வைத்த இடம் திறக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நடை பெறும் இடங்களுக்கு தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஒவ்வொரு டேபுளுக்கும் செல்ல அனுமதியுண்டு.
வேட்பாளரின் ஏஜெண்டுகளிடம் சீல் வைக்கப்பட்டு திறந்த வாக்கு பதிவு இயந்திரம் காண்பிக்கப்படும்.
அதில் சந்தேகம் இருப்பின் அந்த வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் நடவடிக்கையை நிறுத்தி அந்த பூத்தில் மறு வாக்கு பதிவு கூட நடத்த வேண்டும் என கோர ஏஜெண்டுகளுக்கு அதிகாரம் உள்ளது.
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு பாதுகாக்கிறது.
தோல்வி அடைந்த வேட்பாளர் யாரேனும் வழக்கு தொடர்ந்தால், அவர் போட்டியிட்ட அந்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு நீதிமன்றத்திடம் கொடுக்கப்படும்.
ALSO READ | சந்தி சிரிக்கும் அமெரிக்க தேர்தல்.... இந்தியாவின் உதவி நாட அமெரிக்க நிருபர் அறிவுரை..!!!
அது மட்டுமல்லாமல், VVPAT எனப்படும் வோட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரைல் (Voter Verifiable Paper Audit Trail) என்ற இயந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு தான் தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவும். இதில் சேகரிக்கப்படும் ஒப்புகை சீட்டுகளை எண்ணிக்கையும் , அந்த குறிப்பிட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் கணக்கிட்டு, சரியாக உள்ள என உறுதி படுத்திக் கொள்ள முடியும்.
2019 தேர்தலுக்கு பிறகு, சில தொகுதிகளை ஆங்காங்கே ராண்டமாக தேர்ந்தெடுத்து, தேர்தல் ஆணையம் எண்ணிப் பார்த்ததில் வாக்கு எண்ணிக்கை மிக துல்லியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடுமையான தேர்தல் விதிகளை பின்பற்றி, போட்டியிடும் வேட்பாளர்களின் உரிமையை பாதுகாக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அது மட்டுமல்லாது, வைஃபை (WiFi) , ப்ளூடூத் (Bluetooth) போன்றவற்றின் மூலம் இதனை ஹாக் செய்ய முடியாதபடி, தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவான முறையில் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாண்ட் அலோன் மெஷின் (Stand Alone Machine) எனக் கூறுவார்கள். அதாவது கால்குலேட்டரை போல், எதனுடனும் இணைக்க முடியாத ஒரு மெஷின்
இதிலிருந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சாட்டுவது வெறும் அரசியல் மட்டுமே என்பது தெளிவாகிறது.
ALSO READ | #துள்ளி_வருது_வேல்: துள்ளி வரும் வேலைக் கண்டு கழகங்கள் அஞ்சுவது ஏன்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR