Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்டமாக, இந்த விபத்து குறித்து, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தரப்பில் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், "ஆக. 26ஆம் தேதியான (சனிக்கிழமை) இன்று 5.15 மணியளவில் மதுரை யார்டில் (ரயில் நிலையம்) உள்ள தனியார் பார்ட்டி பெட்டி/தனிநபர் பெட்டி தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் 5.45 மணிக்கு வந்தனர். 7.15 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. மற்ற பெட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 


இந்த ரயில் நேற்று (ஆக. 25) நாகர்கோவில் சந்திப்பில் இணைக்கப்பட்ட ஒரு தனியார் பெட்டி/தனிநபர் பெட்டி ஆகும். ரயில் எண். 16730 (புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ்) 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்தது. பார்ட்டி பெட்டி பிரிக்கப்பட்டு மதுரை ஸ்டேப்லிங் லைனில் வைக்கப்பட்டது. அதாவது, கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.



தனியார் பெட்டி/தனிநபர் பெட்டி உள்ள பயணிகள், சட்ட விரோதமாக கேஸ் சிலிண்டரை கடத்தி வந்துள்ளனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்டு பல பயணிகள் பெட்டியில் இருந்து இறங்கினர். சில பயணிகள் நடைமேடையிலேயே கீழே இறங்கினர்.


மேலும் படிக்க | பேருந்து வசதி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதி


கடந்த ஆகஸ்ட் 17 ந் தேதி லக்னோவில் இருந்து  ஐஆர்சிடிசி ஆன்மீக  சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு அதிகாலை 5.15 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர். ரயில் எண் 16824 கொல்லம் - சென்னை எழும்பூர் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை (ஆக. 27) அவர்கள் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர். அங்கிருந்து லக்னோ செல்லும் திட்டமிட்டிருந்தனர். 


ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் எந்த தனிநபர் வேண்டுமானாலும், பார்ட்டி பெட்டிகளை முன்பதிவு செய்துகொள்ள இயலும். ஆனால், அவர்கள் கேஸ் சிலிண்டர் போன்று எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்து வர அனுமதி இல்லை. அந்த பெட்டியில் பயணம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சத்தை நிவாரணமாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 


விபத்து நடந்தது எப்படி?


பெட்டியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர். பயணி ஒருவர், பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்து டீ தயாரிக்க, தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயைக் கண்டு வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் கீழே இறங்க, அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதாவது, கொள்ளையர்கள் ஏறிவிடுவார்கள் என பெட்டியை பூட்டி வைத்திருந்ததால், தீப்பற்றியபோது வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதில் கோச்சில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகி உள்ளனர். இதுவரை 9 சடலங்கள், விரைந்து வந்த மதுரை டவுண் தீயணைப்புத் துறையினரும், அக்கம்பக்கத்து பொதுமக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் 9 சடலங்களை மீட்டு உள்ளனர். அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினர், போலீஸ் கமிஷனர் வந்து ஆய்வு செய்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர் பி. மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விபரங்களைக் கேட்டு அறிந்தார்.


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளே... அதிமுக- பாஜகவின் தேர்தல் கணக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ