அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளே... அதிமுக- பாஜகவின் தேர்தல் கணக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2023, 03:32 PM IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
  • அடுத்த முறை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு
  • அதிமுக, பாஜக போடும் தேர்தல் கணக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளே... அதிமுக- பாஜகவின் தேர்தல் கணக்கு title=

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டார். அவரது கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.  அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை  நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த  வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி  உத்தரவிட்டிருந்தார்.  இன்று நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அன்றைய செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் திமுக சட்டத்துறை கவனித்து வருகிறது. அவர் வெளியே வந்தால் தான் கொங்குப் பகுதியில் திமுகவின் பலத்தையும், தேர்தலில் வெற்றியையும் உறுதி செய்ய முடியும் என்பதால் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைமுறையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது திமுக தலைமை.

அதேநேரத்தில் டெல்லி மேலிடத்திற்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில் அவரை சிறையிலேயே முடக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு பகுதியில் கணிசமான இடங்களில் அதிமுகவும், போட்டியிடும் ஓரிரு இடங்களில் பாஜகவும் வெற்றி பெறலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். 

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News