Padma Shri Award To Valli Kummi Attam: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த பத்திரப்பன் என்ற வள்ளி கும்மியாட்ட கிராமிய கலைஞருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மையான 'வள்ளி ஒயில் கும்மி' நடனத்தைக் கற்றுக் கொடுக்கும் குரு எம்.பத்ரப்பன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்றவை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 132 பிரபலங்கள் மதிப்புமிக்க விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

87 வயதான குரு பத்திரப்பன், பழங்கால தமிழ் நாட்டுப்புற நடன வடிவமான வள்ளி ஒயில் கும்மியில் நிபுணத்துவம் பெற்றவர். முருகன் மற்றும் வள்ளியின் கதைகளை சித்தரிக்கும் நடனம் மற்றும் பாடலின் கலவையான வள்ளி ஒயில் கும்மி என்ற நாட்டுப்புற கலை வடிவம் சமூகப் பிரச்சினைகளையும் கலையின் மூலம் எடுத்துக் கொள்கிறது.


தங்களது துறையில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த விருதுப் பட்டியலில் ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் இந்திய குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்படும். 


மேலும் படிக்க | Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது


குரு எம்.பத்ரப்பன், மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். மாரண்ணகவுடர் - ரங்கம்மாள் தம்பதிகளின் மகனான திருபத்திரப்பன் வள்ளி கும்மியாட்ட கிராமிய கலைஞர். இவருக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். மகள் முத்தம்மாள் (62). மருமகன் ரங்கசாமி. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த கலைஞர் ஒருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.


திரு பத்ரப்பனின் இரு மகன்களில் ஒருவரான அரவிந்த் மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் சூப்ரவைசராகவும், மற்றொரு மகன் பிரபாகரன் சிறுமுகை காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும் பணிபுரிகின்றனர். பத்திரப்பனின் மகன் நக்கீரன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து விட்டார்.


வள்ளி ஒயில் கும்மி கலைஞர் பத்திரப்பனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. தற்போது மத்திய அரசு பாரம்பரிய கலைப்பிரியில் வள்ளிகும்மியாட்ட கலைஞரான இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி


பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பத்திரப்பன், கடந்த 60 ஆண்டுகளாக வள்ளி கும்மி நடனத்தை ஆடிவருவதாக தெரிவித்தார். தனது 20 வயதி்ல் இருந்து இந்த வள்ளி கும்மி நடனத்தை ஆடி வந்தாலும், இந்த பாரம்பரிய நடனக் கலை அழிந்துவிடாமல் காப்பதற்காக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை,  அன்னூர், சூலூர், கருத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள 200க்கு மேற்பட்டவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.


இதன்மூலம் பலர் இதில் தேர்ச்சி பெற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பித்து, நாட்டுப்புற கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக திரு பத்திரப்பன் தெரிவித்தார். மேலும், பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக உள்ள அனைவரும் சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று கூறும் குரு பத்திரப்பன், இந்த நடனத்தை சுலபமாக கற்றுக் கொள்ளலாம், இதை பயிற்ச்சி செய்வதன்மூலம் உடலில் நரம்புகள் வலு பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று கூறுகிறார்.


பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் குரு பத்திரப்பன், 80 வயதாகும் தனக்கு, பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும், இதன்மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். விருது வழங்கிய மத்திய அரசுக்கு  மனமார்ந்த நன்றியையும் குரு பத்திரப்பன் தெரிவித்துக் கொண்டார்.  


மேலும் படிக்க | தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ