Padma Awards 2023: பத்ம விருதுகள் அறிவிப்பு... விருது பெற்றவர்கள் முழு பட்டியல் - இதோ!

Padma Awards 2023: 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்துறை சார்ந்தவர்களுக்கு மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது பெற்றவர்களின் முழு விவரத்தை இங்கு பார்க்கலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2023, 11:41 PM IST
  • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும்.
  • 26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர்
Padma Awards 2023: பத்ம விருதுகள் அறிவிப்பு... விருது பெற்றவர்கள் முழு பட்டியல் - இதோ! title=

Padma Awards 2023: மத்திய அரசால் பல்வேறு துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை (ஜன. 26) 74ஆவது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

1954ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிவிலியன் விருதுகள், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். மேலும் இந்த விருதுகள் அவர்கள் சார்ந்த துறையில் 'வித்தியாசமான பணியை' அங்கீகரிக்க முயல்கின்றன. மேலும் அனைத்து துறைகளிலும்/ பணிகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள்/சேவைக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்றவைக்கு வழங்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள எகிப்து அதிபர் அப்துல் ஃபதா எல் சிசி!

இதில், நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், ORS மருந்து பயன்பாட்டில் முன்னோடியாக இருந்து, மறைந்த திலீப் மஹாலனாபிஸூக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் ஐந்து கோடிக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்ட ஓரல் ரீஹைட்ரேஷன் சிஸ்டம் அல்லது ORSஇன் பரவலான பயன்பாட்டிற்கு வழிவகுத்தவர், திலீப். 

1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது அகதிகள் முகாம்களில் பணியாற்றிய போது திலீப் மஹாலனாபிஸ் ORS இன் செயல்திறனை நிரூபித்ததாக மத்திய அரசு கூறியது. சமாஜ்வாடி கட்சியின் மறைந்த தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு பொது விவகாரங்களுக்கான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹுசைன் கலைத் துறையில் பத்ம விபூஷண் பெற்றார். வணிகம் மற்றும் தொழில் துறைக்காக கே.எம்.பிர்லாவுக்கு பத்ம பூஷன் விருதும், சமூகப் பணிக்காக மூர்த்தி பத்மபூஷன் விருதும் பெற்றனர். தொடர்ந்து, பல தரப்பினர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து இங்கு காண்போம். 

ஜல்பைகுரி மாவட்டத்தின் டோட்டோபாரா கிராமத்தைச் சேர்ந்த டோட்டோ (டெங்கா) மொழிப் பாதுகாப்பாளரான தானிராம் டோட்டோ, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் (டெங்கா மொழி) பத்மஸ்ரீ விருதைப் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 80 வயதான மொழியியல் பேராசிரியரான பி ராமகிருஷ்ண ரெட்டி, இலக்கியம் மற்றும் கல்வி (மொழியியல்) துறையில் பத்ம விருது பெறுவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூகப்பணிக்காக (விலங்குகள் நலன்) பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர். 

வெற்றியாளர்களின் முழுப் பட்டியல்

பத்ம விபூஷன்

திலீப் மஹாலனாபிஸ்
வயது: 87
துறை: மருத்துவம் (குழந்தை மருத்துவம்)
மாநிலம்: மேற்கு வங்காளம்

பத்மஸ்ரீ

ரத்தன் சந்திர கர்
வயது: 66 வயது
துறை: மருத்துவம் (மருத்துவர்)
மாநிலம்: அந்தமான் & நிக்கோபார்

ஹிராபாய் லோபி
வயது: 62 வயது
துறை: சமூகப்பணி (பழங்குடியினர்)
மாநிலம்: குஜராத்

முனீஸ்வர் சந்தர் தாவர்
வயது: 76 வயது
துறை: மருத்துவம் (மலிவு விலை சுகாதாரம்)
மாநிலம்: மத்திய பிரதேசம்

ராம்குய்வாங்பே நியூமே
வயது: 75 வயது
துறை: சமூக பணி (கலாச்சாரம்) 
மாநிலம்: அசாம்

வி பி அப்புக்குட்டன் பொடுவாள்
வயது: 99 வயது
துறை: சமூகப்பணி (காந்தியம்)
மாநிலம்: கேரளா

சங்குராத்திரி சந்திர சேகர்
வயது: 79 வயது
துறை: சமூக பணி (மலிவு விலை சுகாதாரம்)
மாநிலம்: ஆந்திரப் பிரதேசம்

வடிவேல் கோபால் & மாசி சடையன்
துறை: சமூகப் பணி (விலங்குகள் நலன்)
மாநிலம்: தமிழ்நாடு

துலா ராம் உப்ரீதி
வயது: 98 வயது
துறை: விவசாயம்
மாநிலம்: சிக்கிம்

நெக்ரம் ஷர்மா
வயது: 59 வயது
துறை: விவசாயம்
மாநிலம்: இமாச்சல பிரதேசம்

ஜானும் சிங் சோய்
வயது: 72 வயது
துறை: இலக்கியம் & கல்வி (ஹோ மொழி)
மாநிலம்: ஜார்க்கண்ட்

தனிராம் டோட்டோ
வயது: 57 வயது
துறை: இலக்கியம் & கல்வி (டெங்கா மொழி)
மாநிலம்: மேற்கு வங்காளம்

பி ராமகிருஷ்ண ரெட்டி
வயது: 80 வயது
துறை: இலக்கியம் & கல்வி (மொழியியல்)
மாநிலம்: தெலுங்கானா

அஜய் குமார் மாண்டவி
வயது: 54 வயது
துறை: கலை (மர செதுக்குதல்)
மாநிலம்: சத்தீஸ்கர்

ராணி மச்சையா
வயது: 79 வயது
துறை: கலை (நாட்டுப்புற நடனம்)
மாநிலம்: கர்நாடகா

கே சி ரன்ரெம்சங்கி
வயது: 59 வயது
துறை: கலை (குரல் - மிசோ
மாநிலம்: மிசோரம்

ரைசிங்போர் குர்கலங்
வயது: 60 வயது
துறை: கலை (நாட்டுப்புற இசை)
மாநிலம்: மேகாலயா

மங்கள காந்தி ராய்
வயது: 102 வயது
துறை: கலை (நாட்டுப்புற இசை)
மாநிலம்: மேற்கு வங்காளம்

மோவா சுபோங்
வயது: 61 வயது
துறை: கலை (நாட்டுப்புற இசை)
மாநிலம்: நாகாலாந்து

முனிவெங்கடப்பா
வயது: 72 வயது
துறை: கலை (நாட்டுப்புற இசை)
மாநிலம்: கர்நாடகா

தோமர் சிங் குன்வர்
வயது: 75 வயது
துறை: கலை (நடனம்)
மாநிலம்: சத்தீஸ்கர்

பரசுராம் கோமாஜி குனே
வயது: 70 வயது
துறை: கலை (தியேட்டர்)
மாநிலம்: மகாராஷ்டிரா

குலாம் முஹம்மது ஜாஸ்
வயது: 81 வயது
துறை: கலை (கைவினை)
மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்

பானுபாய் சித்தாரா
வயது: 66 வயது
துறை: கலை (ஓவியம்)
மாநிலம்: குஜராத்

பரேஷ் ரத்வா
வயது: 54 வயது
துறை: கலை (ஓவியம்)
மாநிலம்: குஜராத்

கபில் தேவ் பிரசாத்
வயது: 68 வயது
துறை: கலை (ஜவுளி)
மாநிலம்: பீகார்

மேலும் படிக்க | Republic Day 2023: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News