நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைவு; ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு
Yarn Price Dropped: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த தொழிற் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயர்ந்தது. இதனை தொடர்ந்து நூல் விலையை குறைக்க வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள், நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில
அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைக்கப்பட்டது. நூல்களின் விலை குறைந்துள்ளதால், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நூற்பாலை சங்கங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் அனைத்து ரகத்திற்கும் கிலோவிற்கு 30 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.333-க்கும், 34-ம் நம்பர் ரூ.375-க்கும், 40-ம் நம்பர் ரூ.395-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.325-க்கும், 34-ம் நம்பர் ரூ. 365-க்கும், 40-ம் நம்பர் ரூ.385-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நூல் விலை ரகத்திற்கு ஏற்றபடி 320 ருபாய் முதல் 400 ருபாய் வரை விற்கப்படுகிறது. அனைத்து வகையான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ