சென்னை: தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு விவசாய பொருட்களுக்கான சந்தை நுழைவு வரியாக (Market Entry Tax) 1 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் பருத்தி, பருத்தி மூட்டை மற்றும் பருத்தி கழிவுகள் ஆகியவை விவசாயப் பொருட்களாகக் கருதி, கொள்முதல் மற்றும் விற்பனையின் போது சந்தை வரியாக அதற்கு 1 சதவிகிதம் வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பருத்தியை (Raw Cotton) மட்டுமே வேளாண் விளைபொருளாகக் கருத வேண்டும், அதேநேரத்தில் பருத்தி மூட்டை மற்றும் பருத்தி கழிவுகளை விவசாயப் பொருட்களாகக் (Agricultural Products) கருதக்கூடாது என்ற நெசவாளர்கள் மற்றும் பருத்தி ஆலை உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு பருத்தி மூட்டை மற்றும் பருத்தி கழிவுகளுக்கான 1 சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில், இந்த அறிவிப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான ஒரு திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபை விதிகள் 110 விதியின் (Tamil Nadu Assembly Rules 110 ) கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆடை விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு பங்களிப்பதாகவும், மாநிலத்தில் 1,570 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இதன் மூலம் நாட்டிற்கான மொத்த பருத்தி நூலில் 45 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) கூறினார். இருப்பினும், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான 95 சதவிகிதம் பருத்தி மூட்டை மற்ற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
ALSO READ | வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம்: முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் பதில்
இந்திய பருத்தி கூட்டுத்தாபனத்திடமிருந்து (Indian Cotton Corporation) பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்யும் போது பெரிய அளவில் பருத்தி மூட்டைகளை சந்தைகளில் சேமித்து வைக்க வேண்டும். அதேபோல பருத்தி மூட்டைகளை கொள்முதல் கொண்டுவர போக்குவரத்து செலவுகளுக்கும் பணம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், சந்தை நுழைவு வரியாக ஒரு பெரிய தொகையும் செலுத்தப்படுகிறது.
எனவே ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, சந்தை நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று நெசவாளர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து, தமிழக அரசு வரியை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.
ALSO READ | கரும்பு நிலுவை தொகைக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR