சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) 34,285 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 468 பேர் இறந்தனர். இன்று 28,745 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,06,652, ஆக உள்ளது.


ALSO READ | மதுரையை மிரட்டும் கருப்பு பூஞ்சை: இதுவரை 50 பேருக்கு தொற்று பாதிப்பு


இதற்கிடையில் புதுச்சேரியிலும் (Puducherry) கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாள்தோறும் 2000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சராசரியாக நாள்தோறும் 30 பேர் மரணமடைந்தனர். புதுச்சேரியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி தலைமை செயலர் அஸ்வனிகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு ஒரு கோப்புடன் சென்றார். அந்த கோப்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அனைத்து குடும்பங்களுக்கும் தலா 3000 ரூபாய் வழங்கப்படும். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR