Tamil Nadu Latest News: தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாடு விடுதலை அடைந்த போது தேசத் தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு காரணமாக இருந்ததாக ஆர்எஸ்எஸ் இயக்கம் 1948ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டில் பசுவதைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.


இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. டெல்லியில் நாடாளுமன்றைத் தாக்கவும் ஒரு கும்பல் முயற்சித்தது. மற்றொரு கும்பல் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜர் தங்கி இருந்த இல்லத்துக்கு தீ வைத்து அவரை உயிரோடு எரித்து படுகொலை செய்யவும் முயற்சித்தது. இந்த கொலை முயற்சியில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் உயிர் தப்பினார். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரவும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார்.


58 ஆண்டுகளாக நீடித்த தடை


இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சிகள் அமைந்த போதும் கூட இந்த தடை நீக்கப்படவில்லை. அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பது அரசு விதி. அதன்படி தற்போது வரை மத்திய, மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில்  இந்த விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.


மேலும் படிக்க | தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா?


'காவிமயமாகும் அபாயம்...'


ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம். ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கம் காரணமாக கல்வி நிலையங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் போன்றவை காவிமயமாக்கப்படும் சூழ்நிலையில், அரசுத் துறைகளையும் காவிமயப்படுத்தும் இம்முயற்சி கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா அவரது X பதிவில்,"58 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1966ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்துக்கு எதிரான உத்தரவு, மோடி அரசால் திரும்பப் பெறப்பட்டது. அசல் உத்தரவு முதலில் நிறைவேற்றப்பட்டிருக்கவே கூடாது.


1966ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பசுவதைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றதால் இந்தத் தடை விதிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்-ஜனசங்கம் லட்சக்கணக்கில் ஆதரவைத் திரட்டியது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். 30 நவம்பர் 1966 அன்று, ஆர்எஸ்எஸ்-ஜனசங்கத்தின் செல்வாக்கால் அதிர்ச்சியடைந்த இந்திரா காந்தி, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்ஸில் சேருவதைத் தடை செய்திருந்தார்" என குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்த தடை நீக்க அறிவிப்பை பாஜகவினர் வரவேற்று வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ