வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை இன்று காலை ஆலோசனை நடத்தினார். கொரோனா நடவடிக்கையாக 5 ஆம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.


வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். இந்நிலையில் விமான பயணத்திற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு RT-PCR சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


READ | நடுத்தர இருக்கைகளை காலியாக வைத்திருங்கள்: விமானங்களுக்கு DGCA உத்தரவு!


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் RT-PCR சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதேபோல், மஹாராஷ்டிரா, டில்லி மற்றும் குஜராத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கும் RT-PCR சோதனை கட்டாயமாகும். 


மேலும், வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் E-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.