முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆருயிர்த் தோழி  சசிகலா, தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஒரு பகுதியாக இருப்பார் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி சமிக்ஞை கொடுக்கிறார்… திமுகவை தோற்கடிக்கும் நோக்கத்துடன் கூட்டணி ஒன்று சேரும்போது, அதிமுக-பாஜக கூட்டணி (AIADMK-BJP alliance) அனைத்து வித கோணங்களையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பார்கள் என்கிறார்  குருமூர்த்தி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துக்ளக் பத்திரிகை வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார். இதற்கு முன்னதாக ஒரு தருணத்தில் அருண் ஷோரி (Arun Shourie) தெரிவித்த ஒரு விஷயத்தை குறிப்பிட்டுப் பேசினார் குருமூர்த்தி. 


“உங்கள் வீட்டில் தீப்பற்றி எரியும்போது, கங்கை நீரால் (Water) தான் தீயை அணைப்பேன் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கழிவுநீர் கிடைத்தால் அதன் மூலமும் தீயை அணைக்க முயற்சிப்போம்” என்று அருண் ஷோரி கூறியதை, எதிர் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலின் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.   


Also Read | அரசியல் கட்சியைத் தொடங்காமலேயே ரஜினி தேர்தலில் செல்வாக்கு செலுத்துவார்


ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு  பரப்பனா அக்ரஹாரா (Parappana Agrahara) சிறையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த குருமூர்த்தியின் இந்த கருத்து வெளிவந்துள்ளது அரசியல் நோக்கர்களால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  


தேசிய அளவில் அரசியல் போக்கு குறித்து பேசிய குருமூர்த்தி, இந்து மத வாக்கு வங்கி என்பது,  மதச்சார்பின்மை என்ற அஸ்திரம் மற்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துபவர்களால் கூறப்படும் குற்றச்சாட்டு என்று கூறினார். "இந்து மக்கள் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்ளும்போது, சிறுபான்மையினருக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது" என்ற கேள்வியை எழுப்புகிறார் குருமூர்த்தி.


தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு குறித்து பேசும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) என்ற கட்சியை எம்.ஜி.ராமச்சந்திரன் (MG Ramachandran) தொடங்கவில்லை என்றால், தமிழகத்தில் தேசியவாதமும் ஆன்மீகமும் இருந்திருக்காது, முற்றிலுமாக துடைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். "எம்.ஜி.ஆர் சிறந்தவர்" (“MGR is great”), என்று அவர் கூறினார்.


Also Read | Rajinikanth: ”கடவுளின் எச்சரிக்கை” அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா?


“திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே ஊழல் மிக்கவை தான்.  ஆனால் அதிமுக தேசியவாதத்தை ஏற்றுக்கொள்கிறது. திமுக ஒரு குடும்பக் கட்சி. AIADMK அப்படியில்லை. DMK  இந்து எதிர்ப்பு மற்றும் பிராமண எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது. ஆனால் AIAMDK-வை அப்படி சொல்லிவிட முடியாது. திமுக பிரிவினைவாதி, சிறுபான்மை என்ற அஸ்திரத்தை வைத்து அரசியல் செய்கிறது. 


இவை மட்டுமல்ல, திமுக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ரவுடியிசத்திற்கு பெயர் பெற்றது. திமுகவுடன் ஒப்பிடும்போது, அதிமுகவில் இது குறைவாக உள்ளது” என்று துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த விஷயத்தில் இந்த கருத்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.  


திமுகவைப் பற்றி பேசும் குருமூர்த்தி, ஒரு  குடும்பத்தினருக்கும் அவர்கள் மீதான ஊழல் வழக்குகளும் நாட்டிற்கே தீங்கு ஏற்படுத்தக்கூடியவை.   அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும், வளர அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கூறினார். "மாநில அரசு ஊழல் செய்துவிட்டதாகக் கூறும் எம்.கே. ஸ்டாலின், ஆளும் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில ஆளுநரிடம் செல்கிறார். ஆனால் அவர் தன்னுடன் அழைத்துச் செல்வது யாரை? 2 ஜி ஊழல் புகழ் ஏ.ராஜாவை எம்.கே. ஸ்டாலின் அழைத்துச் செல்கிறார்" என்று குருமூர்த்தி கூறுகிறார்.


Also Read | பார்த்து மகிழுங்கள் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு in Pics


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 


Android Link - https://bit.ly/3hDyh4G 


Apple Link - https://apple.co/3loQYeR