சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கர்நாடக உள்துறை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்து குவிப்பு வழக்கில் மிக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயலலிதாவின் (J.Jayalalitha) உதவியாளரான சசிகலாவுக்கு (Sasikala) நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் இப்போது நிறைவடைய உள்ளது. 


அந்தவகையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று சசிகலா விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது. 



இந்த நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உளவுத்துறை (Karnataka) அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில்,


  • சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா (Parappana Agrahara) சிறைக்கு வளாகத்தில் கூட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

  • வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

  • கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டம். 

  • இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், விடுதலை செய்யப்படும் நாளன்று நிலவும் சூழலுக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களை ஏற்படலாம்.