சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழக்கு காரணமாக மாணவியின் பெற்றோரை நேற்று நேரில் சந்திக்க முடியவில்லை . 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த மாணவியின் தாய் M. com படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து  முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினோம். அருகில் உள்ள தனியார் பள்ளிகள் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளன. நாற்காலிகள் உட்பட அனைத்தும் தூக்கி செல்லப்பட்டுள்ளன. 


சான்றிதழ்கள் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். சான்றிதழ்களில் புகை வாடை இப்போதும் அடிக்கிறது. கலவரம் திட்டமிடப்பட்டது கோபத்தில் ஏற்படவில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி திடீர் விசாரணை!


மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. எனவே வருவாய்த்துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து  கொடுப்போம்.
மாணவர்களுக்கு போலி மாற்றுச் சான்றிதழ் எளிதில் வழங்க முடியும். 


மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். மாணவியின் அருகில் அமர்ந்து படித்த ஒரு மாணவி அந்த பள்ளியிலேயே படிக்க விரும்புவதாக எங்களிடம் கூறினார். மாணவி இறந்து 24 மணி நேரத்திற்குள் துறை ரீதியான விளக்கம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு விட்டது. 


அந்தப் பள்ளியின் அருகே 5 அரசுப் பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் இருக்கின்றன. இதை அந்த மாணவர்களுக்கு பயன்படுத்த முடியுமா என முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் : தனியார் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ