கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி 13-ம் தேதி மாடியிலிருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று பல்வேறு அமைப்பினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், 55 போலீசார் காயமடைந்தனர். இதனைக் கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிரடி படையினர் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதை அடுத்து, மாலை 3 மணிக்கு கனியாமூர் தனியார் பள்ளியானது காவல்துறை கட்டுப்பாட்டில் வந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்க | மாணவியின் உடல் மீண்டும் போஸ்ட் மார்டம் | தந்தை கண்முன் நடத்த நீதிமன்றம் உத்தரவு
மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பாக தனியார் பள்ளி வேதியியல் ஆசிரியை மற்றும் கணித ஆசிரியை ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பிற மாணவர்கள் முன்னிலையில் மாணவியைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கலவரம் தொடர்பாக காலை வரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, கரூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வன்முறை குறித்து சமூக வளைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதாரத்தைப் பார்க்கும்போது, அங்கு இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதிப்பதற்காக சின்னசேலம் அருகில் இருக்கும் முதன்மைக் கல்வி அலுவலரிடம், அருகில் இருக்கும் அரசுப்பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பார்க்க கூறியிருப்பதாகக் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ