வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவி - சோகம் !!
school girl : கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி மகளிர் பள்ளியில் கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவியை வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த சோகம் - உதவி கோரும் மாணவியின் தாயார்
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே உள்ள பெண்றஹள்ளி கிராமத்தில் அரசு மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ளார். இவருடைய மனைவி சாந்தி. இவர் கூலிவேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் ஆசினி, அரசம்பட்டி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி அன்று பள்ளிக்கு சென்றார். பின்னர் ஆசினி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திடீரென புகுந்த வெறிநாய் மாணவி ஆசினியை பல இடங்களில் கடித்து குதறியது. கண் பகுதியில் பலமாக கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு கண் வீக்கம் அடைந்தது.
இதனிடையே, படுகாயமடைந்த மாணவி போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஆசினிக்கு வெறிநாய் கடித்ததில் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பின்னர், மாணவியை சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | காதல் மனைவியை ஆந்திரா கூட்டிச்சென்று கணவன் செய்த காரியம்... திடுக்கிடும் வாக்குமூலம்
ஆனால் கண் பார்வையில் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. பின்னர், பணம் இல்லாத காரணத்தால் மாணவியின் மருத்துவ சிகிச்சையை தொடர முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க உதவுமாறு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ