செஸ் ஒலிம்பியாட் போஸ்டர் தமிழர்களுக்கான அவமானம் - கொந்தளித்த சீமான்
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தமிழர்களுக்கான அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நடக்கிறது. இதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசு செய்த செஸ் ஒலிம்பியாட் விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்களென்று பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், போஸ்டர்களில் பிரதமரின் படம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றமும் தெரிவித்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா 110 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி கடன் வந்துள்ளது. இந்த கடன் விழுக்காடு உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற, கட்டமைக்க நினைக்கின்ற வளரச்சி. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கூடம் இடியும் நிலையில், சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் பணம் வாங்கி சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவீர்களா?
இவ்வளவு சிக்கல் இருக்கும்போது 80 கோடி ரூபாய்க்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்று கூறுவது சரியா? சமாதி வைத்ததே அதிகம். எனவே தேவை இல்லாத ஆட்டமெல்லாம் காட்டக்கூடாது. மக்கள் காசை வீணடிக்கக்கூடாது, ஆட்சி நடத்துங்கள். செஸ் போட்டி வந்துவிட்டது, அடுத்தது கடலோரத்தில் நடக்கின்ற கையுந்து பந்து போட்டிக்கு முதல்வர் அனுமதி கேட்கிறார். அதன்பின்னர் புலிகளை காப்பதற்கான கருத்தரங்கு நடத்த அனுமதி கேட்கிறார். இதிலேயே வண்டி ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் வருவதாக கூறினாரா? அல்லது தமிழக அரசு சென்று அழைத்ததா? தமிழக அரசுதானே அழைத்தது. முகநூலில் அவரை விமர்சித்து எழுதக்கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஒன்று பிரதமரை ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கக்கூடாது, அழைத்தால் அவருக்குரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவருடை படங்களை இடம்பெற செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கூப்பிடாமல் இருந்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | மோடி பட விவகாரம்... தமிழகத்திற்கே அவமானம் - குஷ்பூ அதிரடி
இதே போட்டியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் நடத்தினார். அவர் பிரதமரையெல்லாம் அழைக்கவில்லை. சிறந்த வீரர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்டு சென்றனர். தமிழக அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அது இங்கிருக்கும் இத்தனை கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா?
எதிரியாக இருந்தாலும் வரசொல்லிவிட்டால் பண்பாட்டோடு நடத்தி அனுப்பியிருக்க வேண்டும். அதுதான் முறை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.
மேலும் படிக்க | லாக் அப் மரணங்கள் இல்லாத நிலையை உருவாக்குங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ