சென்னை: இலங்கைக்கு அருகில் சில தினங்களுக்கு முன்னதாக எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து  இந்தக் கப்பல் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தது. கப்பலில் 1486 கொள்கலன்கள் மற்றும் சுமார் 25 டன் அபாயகரமான நைட்ரிக் அமிலம் மற்றும் பிற ரசாயனங்கள் இருந்தன. 


மே 20, வியாழக்கிழமை அன்று, MV X-Press Pearl கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து இலங்கை துறைமுக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கப்பல் கொண்டு வரப்பட்டது. ஐந்து இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



இலங்கை கேட்டுக் கொண்டதற்கு இணங்க,  ஐ.சி.ஜி.எஸ் வைபவ் மற்றும் வஜ்ரா  (patrol vessels ICGS Vaibhav and Vajra) என இரண்டு கடலோர ரோந்து கப்பல்களை இந்திய கடலோர காவல்படை  (Indian Coast Guard) அனுப்பியுள்ளது. தீயணைப்பு, மாசு கட்டுப்பாடு முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்த கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.


Also Read | தமிழகத்தில் உயரும் இறப்பு எண்ணிக்கை: இன்று 34,285 பேருக்கு பாதிப்பு, 468 பேர் உயிர் இழப்பு!!


செவ்வாய்க்கிழமை காலை நிலவிய கடுமையான வானிலை காரணமாக கப்பலில் இருக்கும் 325 மெட்ரிக் டன் எரிபொருள்கள் இப்பகுதியில் எண்ணெய் கசிவு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.


தீ விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுல்ள இரண்டு கப்பல்களைத் தவிர, கொச்சி, சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றில் இருந்து உதவிக்கு செல்வதற்காக இந்திய கடலோரக் காவல்படை தயாராக இருக்கிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய அதிகாரிகளும், இலங்கை அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  


வான்வழி கண்காணிப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டிற்காக இந்திய கடலோர காவல்படை விமானங்கள், சென்னை மற்றும் கொச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுகின்றன.


Also Read | தமிழக பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும்: அன்பில் மகேஷ்


கடுமையான சூறாவளியான  டக் தே-வின் தாக்கத்தால் கடந்த பத்து நாட்களில், இந்தியாவின் மேற்கு கடற்கரை முழுவதும் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளன.


லட்சத்தீவு, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத்தில் டக் தே சூறாவளியின் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 


தற்போது,  ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையிலான இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கரைகடக்கும் யாஸ் சூறாவளியால் (Cyclone Yaas) எழக்கூடிய பாதிப்பை சமாளிக்க இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல்படையும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Also Read | Cyclone Yaas: யாஸ் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR