Chennai LIC Fire Accident: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!



மேலும், கட்டடத்தின் மேல்பகுதியில் இருக்கும் பெயர் பலகையில் தீப்பற்றியிருப்பதாக கூறப்பட்டது. தற்போது, தீயணைப்பு வீரர்களின் முயற்சியால், தீ அணைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் கட்டடத்தில் ஆள்நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.


1975ஆம் ஆண்டின் தீ விபத்து!


இதேபோன்று, 1975ஆம் ஆண்டிலும் எல்ஐசி கட்டடத்தில் தீப்பிடித்தது. மேல் மாடியில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையில் வசதியும் இல்லை.  அந்த நேரம் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக தண்ணீரும் இல்லை. கடைசியில் கூவம் நீரை பயன்படுத்த முடிவு செய்து கூவம் ஆற்றில் இருந்த நீரை தீயணைப்புத்துறை எடுத்து பயன்படுத்தினர். 


பெரிய அளவில் சென்னையில் கட்டடங்கள் இல்லாததால் தொலைத்தூரத்தில் இருந்தவர்கள் அதை பார்க்க முடிந்தது. எல்.ஐ.சி தீ விபத்து காரணமாக மறுநாள் முழுவதும் அண்ணா சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


அந்நேரம் சென்னையில் சில நிறுவனங்கள் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியிருந்தது. எல்ஐசி தரைத்தளம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது, கம்யூட்டர். அதில் தென் மாநில இன்ஷுரன்ஸ் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. தீ முழுவதும் பரவாமல் தடுக்கப்பட்டதால் கம்யூட்டர் அதன் டேட்டாக்கள் தப்பியது.  தற்போது, 48 ஆண்டுக்கு பின் நடந்தது மிகபெரிய தீ விபத்து. முன்னர், 2016-ல் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. அதுவும் உடனடியாக அணைக்கப்பட்டது.



மேலும் படிக்க | மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை... சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ