சென்னையில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரா சித்த மருத்துவமனையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சுதா சேஷையன், “இன்று இருக்கக்கூடிய வாழ்கைமுறையை இயற்ககை முறையோடு அல்லது அதிலிருந்து விலகி நிற்கிறது. அறுபது வயதில் எட்டிப்பார்த்த நோய்கள் இருபது வயதில் எட்டி பார்த்து வருகின்றன. இயற்கைக்கு மாறாக செயல்பட்டு கொண்டே இருந்தால் நோய்கள் அதிகமாகி கொண்டே போகிறது.  இயற்கையோடு வாழும் முறை முற்றிலும் காலாவதியாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'ஸ்டாலின் ஒரு பொம்மை... மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்...' - செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்


நமது‌ வாழ்வியல் முறை இயற்கையோடு இருந்தால்தான் அது சிறப்பாக இருக்கும். பாராம்பரிய மருத்துவம் எனப்படும் சித்தமருத்துவம்  மூதாதையர்களால் கடைபிடிக்கப்பட்ட மருத்துவமாகும். டெங்கு பரவிய காலங்களிலும் கோவிட் 19 உச்சத்தில் இருந்த போது கபசூரம் பெருமளவில் பங்காற்றி உதவியது. சித்த மருத்துவத்தின் பொக்கிஷத்தை ஆராய்ச்சியாளர்கள்  எடுத்து கூற வேண்டும் அதனோடு சித்த மருத்துவ ஆய்வை மேம்படுத்தவேண்டும். விதவிதமாக தோன்றி கொண்டிருக்க கூடிய நோயை இல்லாத வகையில் சித்த மருத்துவத்தில் வழி வகைய செய்யவேண்டும்.



பண்டைய‌காலத்தில் போர்காலங்களில்  மார்பில்  காயங்கள் ஏற்படும்போது அதன் தழும்பை நீக்க  அத்தி ரசத்தை சேர்த்து  பூசுவார்கள்.காஸ்மெட்டிக் சார்ஜிரி இருந்தாலும் சித்த மருத்துவத்தில் எந்தவித பாதிப்பு இல்லாது அத்தி சாறில் கலந்த கலவை கொண் டு நீக்க முடியும் என்று கூறபட்டிருப்பதை  சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.


மேலும் படிக்க | கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ