நடு இரவில் நடந்த பயங்கரம் சம்பவம் ஒன்று சிவகங்கை முழுக்க குலை நடுங்க வைத்துள்ளது. சிவகங்கையில் வசித்துவந்தவர் முத்துப்பாண்டி. பிரபல ரவுடியான இவர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இன்று சிவகங்கை கடைத்தெருவில் தனது நண்பரான சரவணன் என்பவருடன்  முத்துப்பாண்டி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென 8 பேர் கொண்ட கும்பல் முத்துப்பாண்டியை சுற்றி வளைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சுதாரிப்பதற்குள் அவர்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக முத்துப்பாண்டியை வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் சரவணனுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் வெட்டுக்காயம் பட்ட முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் சரவணன் பலத்த வெட்டுக்  காயங்களுடன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கிடைத்த தடயங்களைச் சேகரித்துக் கொண்டனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக முத்துப்பாண்டியை கொலை செய்தார்களா என்பது குறித்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR