சென்னை: தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. SPB தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சமீபத்தில்தான் அவர் உடல் நலம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. அவரது மகன் SP சரணும் இதை உறுதிபடுத்தினார். 


ALSO READ: எஸ்பி பாலசுப்பிரமண்யம் உடல்நிலை.....விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்


இது குறித்து  எஸ்.பி. சரண் சமீபத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது., “அப்பா நலம் பெறுவதற்கான நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறார். எக்மோ / வென்டிலேட்டர், (ICU) பிசியோதெரபி வாய்வழி திரவங்களுடன் தொடர்கிறது. அவர் விரைவில் மருத்துவமனையை விட்டு வெளியேற ஆர்வமாக உள்ளார் ". என்று பதிவிட்டு இருந்தார்.  


முன்னதாக கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) அவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது மருத்துவமனை அவர் உடல் நலம் திடீரென மோசமடைந்துள்ளதாக கூறியுள்ளது. 74 வயதான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று (COVID-19) காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  


ALSO READ: மகிழ்ச்சி!! எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மருத்துவ அறிக்கை