சிலை கடத்தல் வழக்கு: டிஎஸ்பி காதர் பாட்ஷா கைது
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாட்ஷாவை இன்று போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் கிராமத்தை சேர்ந்த, ஆரோக்கியராஜ் என்பவரிடம் கோவில்களில் இருந்து திருடப்பட்ட 2 பஞ்ச லோக சிலைகள் இருந்தன. வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு, அவற்றை விற்க முயற்சித்தார்.
இதை அறிந்த 2 போலீசார் சிலைகளை கைப்பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகளை, 15 லட்சம் ரூபாய்க்கு, கடத்தல்காரரிடமே போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா விற்று விட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த காதரை போலீசார் கைது செய்து செய்தனர். மேலும் காதரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.