சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 673 மீனவர்கள் (Fishermen) விரைவில் மீண்டும் மாநிலத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் (Minister D Jayakumar) இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். அவர்கள் ஈரானில் (Iran) இருந்து ஒரு சிறப்பு கப்பலில் தூத்துக்குடி (Tuticorin) துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் எனவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்களை மீண்டும் அழைத்து வருமாறு கோரிக்கை வைத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Tamil Nadu CM Edappadi K Palaniswami) வெளிவிவகார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். 


READ | ராமநாதபுரம்: விமானப்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு


இதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் மீனவர்களை அணுகி, மருத்துவ பரிசோதனைகள் செய்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர் எனவும் கூறினார்.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) வேகமாக அதிகரித்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மீனவர்கள் அங்கு சிக்கித் தவித்ததாகவும், அவர்களை மீண்டும் கொண்டுவர தமிழக அரசு (TN Govt) நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


READ | தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல‘இ-பாஸ்’ கட்டாயம்


தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் மீன்பிடிக்க ஒப்பந்த அடிப்படையில் ஈரானுக்குச் சென்றுள்ளனர் என்று ஜெயக்குமார் (D Jayakumar) தெரிவித்தார்.


ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்ய ஈரானுக்குச் சென்ற இந்த மீனவர்கள், கோவிட்-19 தொற்றுநோயைத் (Covid-19 Pandemic) தொடர்ந்து அந்த நாட்டில் சிக்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.