பேரூர் அருகே ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மோதல் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது ஒரே ஒரு மாணவனை (TN Students) 15 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவர்கள் தன்னை தாக்கிய மாணவர்களிடம் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.


ALSO READ | தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு


ஒரு மாணவருக்கு தலையில் ஆழமாக குத்து விழுந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இதுகுறித்து அவர்களை போலீசார் (TN Police) வழக்குப்பதிவு செய்து முன்னாள் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். 


இந்த நிலையில் மற்ற மாணவர்களுக்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கத்திக்குத்து ஏற்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக புகார்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR