சமீபத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான உறவில் மிகப்பெரிய இடைவெளி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுவதாகவும், தங்களை தரக்குறைவாக ஆசிரியர்கள் நடத்துவதாகவும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருதரப்பில் இருந்தும் நிகழ்ந்து வருகின்றன. ஆசிரியர்கள் படித்த மாணவப் பருவ வாழ்வு முறையும், தற்போது மாணவர்களாக படிக்கும் வாழ்வு முறைக்கும் இடையில் மிகப்பெரிய தலைமுறை வித்தியாசம் இருப்பதால் இந்தப் பிரச்சனைக் குறித்து அதிகளவு ஆசிரியர்கள் உரையாட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி! மாணவிக்கு உதவிய எம்.எல்.ஏ!


மாணவர்களுக்கு வெறுமனே பாடங்களை கற்பிக்கும் முறையைத் தாண்டி இன்னும் நவீன கால மாற்றங்களையும், மாணவர்களின் நவீன உளவியல் தன்மையும் என இதில் பல பிரச்சனைகளும், சிக்கல்களும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். பழைய கால வடிவ முறையையே ஒழித்துக்கட்டிவிட்டு புது பாட வடிவமைப்பும், க்ரியேட்டிவ்வான உரையாடல் மற்றும் வகுப்புகளை தொடங்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்ற அளவுக்கு இந்த பிரச்சனை வீரியமடைந்திருக்கிறது. இந்த உரையாடல்கள் ஒரு பக்கம் சென்றாலும், இன்னொரு பக்கம் இன்னும் மாணவர்களை வைத்து வேலைகளை வாங்கும் மனோபாவம் மட்டும் சில பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஓய்ந்தபாடில்லை. எத்தனை அறிவுறுத்தல்கள் இருந்தாலும் மாணவர்களை வேலை வாங்கும் சம்பவங்கள் மட்டும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பள்ளியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.


மேலும் படிக்க | மாணவர்களை அவமதித்தால்..! எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அடுத்த  கும்மனூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்போது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பள்ளியில் சுமார் 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களே வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியில்  இருந்து பக்கெட் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று கழிவறையை சுத்தம் செய்யும் அவலமும் இந்தப் பள்ளியில் நடந்து வருகிறது. பள்ளியின் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு அரசுப்பள்ளியில் காலையில் முதல்முதலாக வரும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR