கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - கருப்பாயி மூத்த மகளான சந்தியா, கீழ்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல தனது கால் வலியைக் கூட பொருட்படுத்தாமல் இரும்பு வண்டியின் உதவியோடு தினந்தோறும் தள்ளிக்கொண்டு நடந்து சென்று வந்த சந்தியா, தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜீ தமிழ் நியூஸின் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் படிக்க | ஊனம் ஒரு குறை இல்லை என்று சாதிக்கத் துடிக்கும் சந்தியா!
இந்த நிலையில் மாணவியின் கோரிக்கையின் மீது 24 மணி நேரத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வழங்கினார். தொடர்ந்து மாணவிக்கு படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிதி உதவியையும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவி சந்தியாவிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து, ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அதைப்போல வருடாந்திர கல்வி உதவித் தொகை வழங்கவும் தமிழக முதல்வரின் உத்தரவின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ தெரிவித்தார்.
மேலும் படிக்க | இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR