தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில், 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.  கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ் ஆன மாணவர்கள், இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு எழுதியாக வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. அதற்கான அட்டவணைகளையும் மார்ச் 2ம் தேதியே பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்!


இந்நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், மனையியல், அறிவியல், கணினி அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த பாடங்கள் நடந்துமுடிந்தன. கணிதம், வணிக கணிதம், தொழில்பாடங்கள் உள்ளிட்ட சில பாடங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. நாளை (04.04.2022) கணிதப் பாடம் 2ம் திருப்புதல் தேர்வு நடைபெற இருந்தது. இந்தப் பாடத்தின் வினாத்தாள் இன்று இணையத்தில் கசிந்துள்ளது. இது, ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேர்வு நடைபெறுமா என்று மாணவர்கள் குழப்பம் அடைந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில், 12ம் வகுப்பு 2ம் திருப்புதல் தேர்வு நாளை கட்டாயம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என்றும், அந்த வினாத்தாள் மின்னஞ்சல் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 


மேலும் படிக்க | Uniform code: போனிடெயில் போட்டால் பள்ளிக்குள் அனுமதி கிடையாது! மாணவிகளுக்கு கட்டுப்பாடு


இதனால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்து விடுபட்டனர். சமீபத்தில் திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முதல் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எங்கோ யாரோ ஒரு ஆசிரியர் செய்யும் இதுபோன்ற தவறுகளால், உடனடியாக மற்றொரு வினாத்தாள் ஆயத்தம் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டுசேர்க்கும் அவசரகால நடவடிக்கையில் பிற கல்வி அலுவலர்கள் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. வினாத்தாள் கசியவிடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி இதுபோன்ற வினாத்தாள் சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR