சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’  திரைப்பட வேலைகளில், ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கபட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பொது முடக்கம் காரணமாக, தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் ரஜினிகாந்த் அனுமதி கோரியிருந்தார். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, இன்று அதிகாலை ரஜினிகாந்த் தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். கத்தார் வரை தனி விமானத்தில் செல்லும் நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து பயணிகள் விமானத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.


நடிகர் தனுஷும் அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷும் ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக,  அமெரிக்காவில் இருக்கின்றனர். அவர்கள் ரஜினியுடன் தங்கியிருந்து இருந்து அவரை பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மாத ஓய்வுக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த், ஜூலை 8ம் தேதி நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.


ALSO READ | கொரோனா நிவாரண நிதி: நடிகர் ரஜினிகாந்த் ரு.50 லட்சம் வழங்கினார்


ரஜினிகாந்த் அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். கடந்த ஆண்டு அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


ஆனால் இந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக வரும் 19ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’  தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மக்கள் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுங்கள்: ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR