கோவை: நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில்(Swiggy) வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அருகிலிருந்த மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது அவரை போக்குவரத்து காவலர் ஒருவர் சரமரியாக தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.



இவ்வீடியோ குறித்து மோகனசுந்தரம் கூறுகையில், "அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி(நேசனல் மாடல்) வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை தான் வழிமறைத்து நிறுத்தினேன்.


பின்னர் ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டு கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், "இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்" என கேட்டு என்னை தாக்கினார்.


மேலும் படிக்க | சொத்துக்காக அக்கா வெறியாட்டம் ; மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி கொலை!


மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என கேட்டு பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு சிறிது நேரம் கழித்து என்னை விடுவித்து அனுப்பினார்." என தெரிவித்தார்.


அந்த பெண் இது குறித்து கேட்டபோதும் போக்குவரத்து காவலர் அப்பெண்ணையும் நீங்கள் செல்லும்படி அவரை அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். 


மேலும், தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல் என்றும்  இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 


தற்போது அந்த காவலர் ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 



இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். இதனிடையே தாக்குதல் நடத்திய பீளமேடு போக்குவரத்து காவலர் சதீசை கைது செய்து உள்ளதாகவும், தற்காலிக பணி நீக்கம் செய்து உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.


இந்நிலையில், ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரத்தை போனில் தொடர்பு கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நலம் விசாரித்தார். பின்னர் போக்குவரத்து காவலர் சதீஷ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர் ஊழியர் மோகனசுந்தரத்திடம் தெரிவித்தார்.


மேலும் படிக்க | மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe