Precautionary Measures Fengal Cyclone Approaches TN : வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள் வந்தாலே, தமிழகத்திற்கு-குறிப்பாக சென்னைக்கு மழையால் கண்டம் இருக்கிறது என்பது உலகறிந்த கதையாக மாறி விட்டது. இந்த இரு மாதங்களில், மழை-புயல் மாறி மாறி அடிப்பது வழக்கம். பல சமயங்களில், போற போக்கில் ஒரு காட்டு காட்டிவிட்டு போகும் புயல், இந்த முறையும் தனது கோர முகத்தை காண்பிக்க தயாராகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய தகவல்களின்படி, நாளை (நவம்பர் 30) இரவு அல்லது நாளை மறுநாள் (டிசம்பர் 1) அதிகாலை 1-3 மணி அளவில், ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 90-100 கி.மீ வேகத்தில் இந்த புயல் கரையை கடக்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 


வானிலை குறித்த அப்டேட்:


இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை மற்றும் மழை குறித்து என்னென்ன அப்டேட்கள் கொடுத்து வருகிறது என்பதை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும். அப்போது, நீங்கள் புயல் கரையை கடந்து விட்டதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். 


தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள் மூலம் இவற்றை தெரிந்து கொள்ளலாம். எந்த நேரத்தில் புயல் கரையை கடக்கிறது, எந்தெந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது நல்லது. 


மூடி வைக்கவும்:


புயலுக்கு முன்பே, வீட்டின் கதவுகளை இறுக்கமாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். ஜன்னல்களின் தாழ்பாள்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். பலவீனமாக இருக்கும் பலகைகள், தகடுகளை டேப் அல்லது சுத்தியல் ஆணி வைத்து அடிக்கவும். 


அவசர தேவைகள்:


அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்னென்னவோ அவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒளிரும் விளக்குகள், மெழுகுவத்திகள், வத்டிப்பட்டி, பேட்டரிக்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வைத்துக்கொள்வது அவசியம். 


குடிப்பதற்கு, அவசிய தேவைகளுக்கு தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். பிஸ்கட்டுகள், பால் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை சேமித்து வைத்திருங்கள். சளி, காய்ச்சலுக்கான மாத்திரைகள், உடல் நலக்குறைபாடுடன் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான மாத்திரைகள் காலியாகிவிட்டால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!


தாழ்வான பகுதியில் இருப்பவர்கள்:


சென்னையில் பேய் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. எனவே, தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், ஏற்கனவே மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். இவர்கள், அவசர உதவி எண்கள், பேரிடம் மேலாண்மை உதவி எண், காவல்துறை எண் ஆகியவற்றை கையிருப்பில் வைத்திருப்பது அவசியம். 


ஆஃப் செய்ய வேண்டியவை:


புயலின் போது, இடி மின்னலுடன் மழை பெய்யும் சமயத்தில் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் மின் இணைப்புகளை ஆஃப் செய்யவும். இன்வர்டர் அல்லது ஜெனரேட்டரை தேவைப்பட்டால் மின் வெட்டு ஏற்படும் சமயத்தில் உபயோகப்படுத்தலாம். 


பார்கிங்:


உங்கள் வாகனங்களில் தண்ணீர் புகாமல் இருக்க, பாதுகாப்பான இடங்களில் அவற்றை பார்கிங் செய்ய வேண்டியது அவசியம். 


வெளியே செல்ல வேண்டாம்:


அவசியமன்றி வெளியில் செல்வதையும், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும். ஆபத்தான செயல்களில் ஈடபடுவதை தவிர்ப்பது, நல்லது. 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ