ஒரு சிலர் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள், வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள். அப்படி 24 மணிநேரமாக தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு மற்ற உணவுகளை சாப்பிடாவிட்டால் உடல் என்னாவகும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
உடலுக்கு சக்தி வேண்டும் என்றால் குளூகோஸ் தேவை. உணவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ்தான் அந்த குளூகோஸை அளிக்கும். உணவு சாப்பிடவில்லை என்றால் உடல் கல்லீரல் மற்றும் தசைகளில் இருக்கும் கிளைகோஜனை எனர்ஜிக்காக எடுத்துக்கொள்ளும்.
நீங்கள் 24 மணிநேரத்தையும் தாண்டி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து, உணவை சாப்பிடாமல் இருந்தீர்கள் என்றால் தசைகளின் திசுக்கள் எனர்ஜிக்காக உடைய தொடங்கும்.
அதேபோல், நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் என்றால் அதுவும் 24 மணிநேரத்திற்கு மேலும் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால் உடல், குளூகோஸிற்கு பதில் கொழுப்பை எனர்ஜிக்காக பயன்படுத்த தொடங்கும். இது 24 மணிநேரத்தில் ஆகாது, அதற்கு மேல் சாப்பிடாமல் இருந்தாலே இது நடக்கும்.
24 மணிநேரமும் தண்ணீர் மட்டும் குடித்தால் குளூகோஸ் சரிவர கிடைக்காது என்பதால் அது மூளையை பாதிக்கும். இது கவனத்தை சிதறடிக்கும் மற்றும் மனநிலையிலும் தாக்கத்தை செலுத்தும். இதனால் எரிச்சல், பொறுமையின்மை ஆகியவை ஏற்படலாம்.
அதாவது நீங்கள் சாப்பிடாமல் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தால் உடல் வெவ்வேறு எனர்ஜி ஆதாரங்களை தேடும், இதனால் உங்களுக்கு வயிறு பசியின் காரணமாக வலிக்கும். இது உங்கள் மூளையும், வயிறும் சேர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டிய நேரமிது என்பது சமிக்ஞை செய்வதாக அர்த்தம்.
நீங்கள் அதிகம் தண்ணீரே குடித்தாலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். குறிப்பாக வெயில் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருந்தாலோ அல்லது வியர்வை அதிகம் வந்தாலோ நீர்ச்சத்து குறைந்துவிடும். இதனால் சோர்வு, தலைவலி, வாந்தி வரும் உணர்வு ஆகியவை ஏற்படும்.
நீங்கள் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருந்தால், உங்களின் உடல் அத்தியாவசிய இயக்கமான செரிமானமத்தை பொறுமையாக்கும். இதனால் உடலில் சக்தி சேமிக்கப்படும்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.