சென்னை: அடுத்த மாதம் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி முதல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என தேசியக் கட்சிகளின் தலைவர்களே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மீது எஃப்‌ஐ‌ஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக பாஜக கட்சியின் மாநிலப் பிரிவின் தலைவர் எல்.முருகன் (BJP state president L Murugan), தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். "கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரச்சாரம் செய்து, மாணவர்களின் மூளை சலவை செய்து அரசியல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அவருக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக (Tamil Nadu BJP) தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 


ALSO READ | திராவிட கோட்டையான தமிழகத்தில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள போராடும் தேசியக் கட்சிகள்


மேலும் கன்னியாகுமரி (Kanyakumari) பள்ளியொன்றில் மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை, தற்போதைய மத்திய அரசோடு ஒப்பிட்டு, மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தயாராக வேண்டும் எனக்கூறி, பொதுமக்கள் மத்தியில், பிரிவினையையும், கோபத்தையும், பயத்தையும் தூண்டும் விதமாக பேசிய ராகுல் காந்தி மீது, இராஜ துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டம் 124-A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.



ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் பாதிவாகும் வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும். 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் (TN Assembly Election 2021) தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.



ALSO READ | TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR