Tamil Nadu Budget 2021-22: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று. முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம், பதவியேற்ற முதல் நாளிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) தனது பட்ஜெட் (Tamil Nadu Budget) உரையில் தெரிவித்துள்ளார்.


ALSO READ | TN Budget 2021 Update: 1921 ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமமாக்கப்படும்


மேலும் கடந்த ஆட்சியின் நிதிநிலை தவறுகளை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது; தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் இந்த பட்ஜெட் உரையில் உள்ளன. 


வாக்குறுதிகளில் குறிப்பிடாத, 14 அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. 


அதுமட்டுமில்லாமல் அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உரிய சரிபார்த்தலுக்கு பின் 2,29,216 பிள்ளைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன. எனவே பதவியேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


ALSO READ | TN Budget 2021: தமிழக பட்ஜெட்; என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR