முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று. முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை (Tamil Nadu Budget) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் வார்த்தைகளாக ஓடும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது.
கொரோனா தொற்று நீடித்து வருவதால், சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3-வது மாடியில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR