TN Budget 2021: தமிழக பட்ஜெட்; என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 08:05 AM IST
TN Budget 2021: தமிழக பட்ஜெட்; என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் title=

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று. முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை (Tamil Nadu Budget) வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் வார்த்தைகளாக ஓடும். இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது.

ALSO READ | TN Budget: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்; புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

கொரோனா தொற்று நீடித்து வருவதால், சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3வது மாடியில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறுகின்றன. மேலும் அனைத்து துறைகளையும் மேம்படுத்த, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறக்கூடும். அரசின் வருவாயை பெருக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், 100 நாள் வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்துதல், நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை- பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு ஆகியவையும் இருக்கக் கூடும்.

அத்துடன் நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு, அரசின் வருவாயை பெருக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கபடக்கூடும் என்று தெரிகிறது.

முன்னதாக தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முந்தைய அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்த வெள்ளை அறிக்கையில் (white paper report) உள்ள தகவலின்படி தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய். 2,63,976 கடன் சுமை கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | TN Budget: வேற லெவல் கமிட்மெண்ட், ரூ. 2,63, 976 கடனை அடைக்க வந்த இளைஞர்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News