தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி மெரினாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்புடன் உழைப்பேன் எனவும் அவர் உறுதி அளித்தார். 


மேலும் படிக்க | "மாநகரத் தந்தை" முதல் "தமிழக முதல்வர்" வரை - மு.க.ஸ்டாலின் குறிப்புகள்


அமைச்சர்  துரைமுருகன்: முதல்வராகி மு.க.ஸ்டாலின் ஒருமுறைதான் தில்லி சென்றார். அவர் மறுமுறை தில்லி செல்வதற்கு முன்பே அரசியலில் அகில இந்திய நட்சத்திரமாக ஜொலித்துவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல; சரித்திரம் படைக்க இருப்பவர் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.


குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்: மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


நடிகர் கமல்ஹாசன்: மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க என கூறியுள்ளார்.


 



 


நடிகர் ரஜினிகாந்த்: இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


 



 


நடிகர் விஜயசேதுபதி: மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.


 



 


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை: மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்றார்.


நடிகர் செந்தில்: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள். தந்தையை போல் தரணி எங்கும் புகழ் பரப்பி, மேலும் வெற்றிகள் பெற்று நல்லாட்சியை தொடர மனமார வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.


மேலும் படிக்க | அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR