தீபாவளிக்கு விற்பனை அமோகம்! இது டாஸ்மாக் மது விற்பனை சாதனை
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆன மது விற்பனை விவரங்கள்...
சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லறை விற்பனை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்கப்படுகின்றன. சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிகரிக்கும். சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட நாள்களில் டாஸ்மாக்குக்கு விடுமுறை விடப்படும். டாஸ்மாக் விடுமுறை தினங்களுக்கு முன்னரே, அங்கு விற்பனை களைகட்டும். அதேபோல, பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு முன்பும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மது வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆன மது விற்பனை விவரங்கள்...
மேலும் படிக்க | மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!
22.10.2022 சனிக்கிழமையன்று முக்கிய ஐந்து மாவட்டங்களில் மது விற்பனை
சென்னை -38.64 கோடி ரூபாய்.
திருச்சி - 41.36 கோடி ரூபாய்.
சேலம் - Rs.40.82 கோடி ரூபாய்.
மதுரை - Rs.45.26 கோடி ரூபாய்.
கோவை - Rs.39.34 கோடி ரூபாய்.
23/10/2022 ஞாயிற்றுக்கிழமையன்று முக்கிய ஐந்து மாவட்டங்களில் மது விற்பனை
சென்னை- 51.52 கோடி ரூபாய்.
திருச்சி -50.66 கோடி ரூபாய்.
சேலம் -52.36 கோடி ரூபாய்.
மதுரை -55.78 கோடி ரூபாய்.
கோவை - Rs.48.47 கோடி ரூபாய்.
இந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் மொத்தமாக 464.21 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போலவே, மதுரை மாவட்டத்தில் தான், தமிழகத்திலேயே டாஸ்மாக் கடைகளில் அதிக மது விற்பனையாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ