சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைத்து, அரசு அலுவலக வாகன நிறுத்துமிடங்களில் சார்ஜிங் புள்ளிகளை வழங்கப்போவதாக தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் (National Green Tribunal) தமிழக அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்ஜிங் நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்படும். மாநிலத்தில் EV தொடர்பான, மின்சார சார்ஜிங் உள்கட்டமைப்பு உற்பத்தித் தொழில்களுக்கு 2025 டிசம்பர் 31 வரை மின்சார வரிக்கு 100% விலக்கு அளிக்கப்படும். இது தொடர்பான தொழில்துறைகளை அமைப்பதற்கான நிலம் வாங்குவதற்கும் ஸ்டாம்ப் வரி (Stamp Duty) விலக்கு வழங்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்த ஒரு பதிலில் தமிழக அரசு (Tamil Nadu Government) தெரிவித்துள்ளது.


அடுத்த 10 ஆண்டுகளில் ஆறு முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதை ஊக்குவிக்கவும், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஆறு நகரங்களில் உள்ள அனைத்து டாக்சிகளையும் EV-க்களாக மாற்றுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் 1,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கும் அரசு துணைபுரியும். இது தவிர, தனியார் ஆபரேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் EV-க்களுக்கு மாறுவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது.


Electric Vehicles உற்பத்தியில் 50,000 கோடி டாலர் முதலீட்டை ஈர்ப்பது, சார்ஜ் செய்வதற்கான வசதிகளை வழங்குதல், பகிரப்பட்ட இயக்கம், பேட்டரிகளை மறுசுழற்சி செய்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் நிராகரிக்கப்பட்ட பேட்டரிகளை சுற்றுச்சூழல் நட்பு முறையில் அப்புறப்படுத்துவது ஆகியவை அரசாங்கத்தின் திட்டங்களாகும்.


ALSO READ: இனி தமிழகத்திலும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... அம்மா நகரும் ரேஷன் கடை திட்டம்!!


"தற்போது, ​​இ-வாகனக் கொள்கை அறிவிக்கப்பட்ட பின்னர், பல புதிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து கையாளத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். EV-க்கள் தான் எதிர்கால வாகனங்களாக இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்கின்றனர்” என்று தமிழக அரசு கூறியுள்ளது.


சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆட்டோமொபைல்களில் பயன்படுத்த சுருக்கப்பட்ட பயோ எரிவாயு (Compressed Bio Gas) கிடைக்கச் செய்யும் புதிய திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) கொண்டு வந்துள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது சுற்றுசூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் இருப்பதோடு, இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடைவதோடு, இது நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும். பெட்ரோல் மூலம் இயக்கப்படும் வாகனங்களை CBG-யாக மாற்ற அனுமதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.


ALSO READ: TNSDC-ன் மேம்படுத்தப்பட்ட portal-ஐ துவக்கி வைத்தார் EPS!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR