சென்னை: தமிழகத்தில் 8 ஆண்டு காலத்துக்கு பின், புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 8 ஆண்டுகளுக்கு பின், மின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இந்த உயர்வு 2026-27ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய மின் கட்டணம் விவரங்கள் பின்வருமாறு:


புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு படி...


- முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். 


- 200 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50


- 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 


- 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ147.50  அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்: நீதிபதிகள்



இதற்கிடையில், மின் கட்டண உயர்வுக்கு பல வித எதிர்ப்புகளும் வந்தன. மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு, அரசியல் தலைவர்கள், அமைப்புகள், பொதுமக்கள் என பலதரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்சர வாரியத்துக்கான இணையதளத்தில் பொது மக்கள் அனைவரும் மின் கட்டணம் உயர்வு தொடர்பான தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியது. இதற்கு 1 மாத கால அவகாசமும் அளிக்கப்பட்டது. மக்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. இதையடுத்து, புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 



8 ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் நிலையில், மின் கட்டணத்திலும் கொண்டுவரப்பட்டுள்ள ஏற்றம் பொது மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து.


மேலும் படிக்க | திமுகவின் பி டீமாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனின் செயல்பாடு உள்ளது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ