TN Weather Forecast: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடதமிழக பகுதிகளை ஒட்டி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 9ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 10, 11, 12-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 8-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூரில் 10 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 8 செமீ, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில்தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க | திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
செப்டம்பர் 9-ம் தேதி லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில்மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை கொடூர கொலை - 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை !!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ