Mamani Award News In Tamil: 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருது தமிழ்நாடு அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருது ஞா.மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), கவிஞர் இலக்கியா நடராசன் (படைப்புத்தமிழ்) மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான இராமலிங்கம் (மரபுத்தமிழ்), கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), முனைவர் சூர்யகாந்தன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதுக்குறித்து தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பை குறித்து பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு. சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. 


மேலும் படிக்க - Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்


அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பெறுவார்கள்.


இலக்கியமாமணி விருது 2022 ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம்-வயது 68 (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கொ.மா.கோதண்டம் வயது 83 (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) வயது 67 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப் பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க - இளம்பெண் சித்ரவதை: களத்தில் இறங்கும் எடப்பாடி.. அதிமுக போராட்டம் அறிவிப்பு


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி மணி அர்ஜீணன் -வயது 70 (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அர. திருவிடம்-வயது 77 (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. க. பூரணச்சந்திரன்-வயது 74 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப் பெற்றுள்ளனர்.


2023 ஆம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு சு. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஞா. மாணிக்கவாசகன்- வயது 94 (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் - வயது 73 (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) திரு. ச. நடராசன் -வயது 64 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.


மேலும் படிக்க - Guidance Tamil Nadu: முதலீட்டாளர்களை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் சிறந்த அமைப்பு விருது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ