விஜயகாந்த் இறுதிப் பயணம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
மறைந்த கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்குகளுக்கான விரிவான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷணன் ஆகியோர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மறைவையடுத்து அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் தீவுத் திடலில் திரண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வரிசையாக சென்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது உடல் ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் அஞ்சலிக்குப் பிறகு சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமையகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை தீவுத் திடலுக்கு வந்து இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் கேட்டறிந்தார். அரசு மரியாதை தொடர்பான விவரங்களையும் கேட்ட உதயநிதி ஸ்டாலின், எந்தவித இடையூறும் இல்லாமல் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விஜயகாந்த் உடல் மாலை 4.45 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு சென்னை மாநகராட்சி சிறப்பு அனுமதியை வழங்கியிருக்கிறது.
இன்று காலை சிறப்பு கூட்டம் சென்னை மாநகராட்சியில் கூட்டப்பட்டு விஜயகாந்த் உடல் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு கொடுக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், எந்த கோரிக்கையையையும் யாரும் வைக்கும் முன்பே கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் என்ற முறையிலும், நண்பர் என்ற முறையிலும் மு.க.ஸ்டாலின் இவ்வளவு சிரத்தை விஜயகாந்துக்காக எடுத்துக் கொண்டதாகவும் டிஆர்பி ராஜா டிவிட்டரில் கூறியுள்ளார். இதனிடையே, கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. மேலும் இறுதிச் சடங்கின்போது முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தாமோ அன்பரசன் ஆகியோர் இந்த இறுதிச் சடங்கில் அரசு சார்பில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ