ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
தூத்துக்குடி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சில அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்தகட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சில அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனனத்திற்கு எதிராக 2018-ல் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டனர். இந்த போராட்டத்தைத் தொடர்ந்து பல உள்ளூர்வாசிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவற்றில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர மீதமுள்ள 38 வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் (Sterlite) தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, முதல்வரிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற (Madras High Court) ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரகின் படி,
1. ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட்.
2. வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
3. கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
4. டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
5. பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
6. எல்.கே.சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
7. அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தற்போது அமைச்சர் (மீன்வளம்) , தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் (தெற்கு), திராவிட முன்னேற்றக் கழகம்.
8. அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
9. ராஜா, மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
10. ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
11. பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்
12. ஆர்தர் மச்சோடா, துணைச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி.
13. பாலசிங், ஒன்றியச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.
ஆகியோர் மீதான வழக்கு திரும்பப்பெறப்படும்.
ALSO READ: Oxygen production: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR