நிவர் சூறாவளியை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அதிக அளவு மழையைக் கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கூற்று படி, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.


சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்.


மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF


இந்நிலையில், தமிழக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு, நிவர் சூறாவளி தொடர்பான சமீபத்திய தகவல்களையும் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகின்றன. அரசாங்கமும் பேரிடர் மேலாண்மைக் குழுக்களும் சில நாட்களாவே மக்களுக்கு பல வித பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அளித்து வருகின்றன.


தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலும், புயல் கடலைக் கடக்கும் இடங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காற்று 100 கி.மீ வேகத்தில் வீசும் என்று ஒரு புல்லட்டின் தெரிவித்துள்ளது.


மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க ஏற்கனவே புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


தென் கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 25 முதல் 26 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR