வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் (Tamil Nadu) கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூர் காகிதபட்டறை மலை பகுதியில் இருந்து மிக பெரிய பாறை உருண்டு சிமெண்ட் ஓட்டு வீட்டின் மீது விழுந்ததில் வீடு முழுவதுமாக சேதம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிச்சாண்டி,ரமணி, நிஷாந்திஆகிய மூன்று பேர் தங்கியுள்ளனர். இவர்கள் திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளனர். கடந்த நாட்களில் பெய்த கனமழை (Heavy Rain) காரணமாக நேற்று மாலை சுமார் 100- டன் எடை கொண்ட பாறை உருண்டுஅவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது.
ALSO READ | கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும் - ஓபிஸ்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில் ரமணி என்பவர் மட்டும் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வத்தனர்
மேலும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணிக்காக வருகை தந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர் 9 மணிநேர போராட்டத்திற்கு பின் மேலும் ஒருவரை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ALSO READ பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் காவலர் சஸ்பெண்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR